என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நத்தம் விசுவநாதன்"
சின்னாளபட்டி:
அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்து 47 -வது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் கொடியேற்றி விழா நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சின்னாளபட்டியில் பொதுக்கூட்டம் நடந்தது. ஆத்தூர்ஒன்றிய செயலாளர் பி.கே.டி. நடராஜன் தலைமை தாங்கினார். உதயகுமார் எம்.பி, மாவட்ட செயலாளர் மருதராஜ், ஆத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மன் கோபி, முன்னாள மாவட்ட கவுன் சிலர் ராஜேந்திரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான நத்தம் விசுவநாதன் பேசியதாவது:-
அறிஞர் அண்ணாவால் சுட்டிகாட்டப்பட்ட எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அ.தி.மு.க. அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவால் வீருநடைபோட்டு தற்போது ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோரால் கட்டிக்காக்கப்பட்டு வருகிறது.
100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க. என்ற கட்சியை யாராலும் அழிக்க முடியாது. சசிகலா என்ற தீய சக்தியோடு ஜெயலலிதா நட்பு வைக்காமல் இருந்திருந்தால் இன்னும் பல ஆண்டுகள் ஜெயலலிதா வாழ்ந்து இருப்பார். தி.மு.க.வில் செயல் தலைவராக இருந்து தற்போது தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு தலைவராக இருக்கும் தகுதி இல்லை. ஸ்டாலினுக்கு கொடுத்த தலைவர் பதவியை துரைமுருகனுக்கோ அல்லது ஐ.பெரியசாமிக்கோ கொடுத்திருக்கலாம்.
இவ்வாறு நத்தம் விசுவநாதன் பேசினார்.
நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் பழனிசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மயில்சாமி, ஜெயலலிதா பேரவை பொருளாளர் அன்பழகன், வக்கம்பட்டி ஊராட்சி செயலாளர் பேட்ரிக் பிரேம்குமார், எம்ஜிஆர் இளைஞரணி பொருளாளர் பாலு, அய்யம்பாளையம் பேரூர் இளைஞரணி செயலாளர் மவுலானா, ஒன்றிய மாணவரணி பொருளாளர் சுகன், ஒன்றிய மகளிரணி இணை செயலாளர் ராமுதாய், மாவட்ட தொண்டரணி துணை செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். #nathamviswanathan #sasikala #jayalalitha
ஓ.பன்னீர்செல்வம்- டி.டி.வி. தினகரனை ரகசியமாக சந்தித்தது பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியதால் தான் அவரது பின்னால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒட்டுமொத்தமாக திரண்டனர்.
அன்றைக்கு சசிகலாவை எதிர்த்ததில் முக்கிய தளகர்த்தாவாக விளங்கியவர்கள் கே.பி.முனுசாமி, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், பொன்னையன், நத்தம் விசுவநாதன் மற்றும் நானும் ஒருவன்.
ஆனால் இதில் யாரிடமும் தகவல் சொல்லாமல் ரகசியமாக சென்று டி.டி.வி. தினகரனை ஓ.பன்னீர் செல்வம் பார்த்திருக்கிறார் என்றால் இவர் பின்னால் நின்ற எங்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் முட்டாள் ஆக்கி விட்டார்.
அரசியலில் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் முதலில் நல்ல மனுஷனாக, உண்மையாக, நம்பகத்தன்மை உள்ளவராக நடந்து கொள்ள வேண்டும்.
இவர் ஏன் ரகசியமாக சென்று சந்திக்க வேண்டும். டி.டி.வி. தினகரன் அவரது ஆதரவாளர்களிடம் சொல்லி விட்டு தான் சந்திக்க வந்துள்ளார்.
ஆனால் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்பட யாரிடமும் சொல்லாமல் அவர் மட்டும் ரகசியமாக சென்று சந்திக்கிறார் என்றால் அவரது நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.
இதில் இன்னும் பல கேள்விகளுக்கு ஓ.பன்னீர் செல்வம் விடை சொல்லாமல் உள்ளார்.
1. தினகரனை சந்தித்து பேசிய போது என்னென்ன பேசினார்கள் என்ற விவரத்தை முழுமையாக சொல்லவில்லை.
4. கடந்த வாரம் தினகரனை மீண்டும் சந்திக்க முயற்சி செய்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் அவரிடம் இருந்து பதில் இல்லை.
இதையெல்லாம் பார்க்கும் போது தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. தொண்டர்களை குழப்பி முட்டாள் ஆக்குகிறார்கள்.
அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் - டி.டி.வி. தினகரன் என்ற அளவில் அரசியல் களத்தை அமைப்பதற்காக இவர்கள் இருவரும் சேர்ந்து கொண்டு நாடகமாடி கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #OPanneerSelvam KCPalanisamy
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்